NATIONAL

சிலாங்கூரின் வர்த்தக மதிப்பு 63,920 கோடி வெள்ளியாகப் பதிவு- சட்டமன்றத்தில் தகவல்

21 நவம்பர் 2024, 8:30 AM
சிலாங்கூரின் வர்த்தக மதிப்பு 63,920 கோடி வெள்ளியாகப் பதிவு- சட்டமன்றத்தில் தகவல்

ஷா ஆலம், நவ. 21- டிரான்ஸ்-பசிபிக் கூட்டமைப்புக்கான விரிவான

மற்றும் முறபோக்கு ஒப்பந்தத்தில் நாடு பங்கற்றதன் வழி சிலாங்கூர்

63,920 கோடி வெள்ளி மதிப்பிலான வர்த்தகத்தைப் பதிவு செய்தது.

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்த

அடைவுநிலை பதிவு செய்யப்பட்டதாக முதலீட்டுத் துறைக்கான

ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கடநதாண்டுடன் ஒப்பிடுகையில் இது 13.9 விழுக்காடு அதிகமாகும் எனக்

கூறிய அவர், வட்டார பரந்த பொருளாதார பங்காளித்துவ ஆதிக்கத்தின்

ஒரு பகுதியாகவும் இந்த அடைவு நிலை விளங்குகிறது என்று அவர்

தெரிவித்தார்.

இந்த பங்கேற்பின் வழி நாட்டின் ஏற்றுமதியில் 23.7 விழுக்காடு அல்லது

26,400 கோடி வெள்ளியும் இறக்குமதியில் 36.6 விழுக்காடு அல்லது 37,520

கோடி வெள்ளியும் பதிவானது என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏற்றுமதி பதிவுகளைப் பார்க்கையில் சிலாங்கூர் மாநிலத்தின்

வர்த்தகம் உயர்வு கண்டுள்ளது. அவ்விரு அமைப்புகளிலும் மலேசியா

கடந்த 2022ஆம் ஆண்டு இணைந்ததன் வாயிலாக பிரமிக்கத்தக்க

அடைநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

முந்தைய மூன்று ஆண்டுகளில் நாட்டின் சரசாரி வர்த்தக மதிப்பு 61,544

கோடி வெள்ளியாக இருந்தது. எனினும், 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்த

எண்ணிக்கை 73,847 கோடி வெள்ளியாக உயர்வு கண்டது என்றார் அவர்.

மாநிலத்தின் உற்பத்தி பொருள்களை பிரபலப்படுத்துவதற்காக வர்த்தக

உச்சநிலை மாநாடு மற்றும் கண்காட்சி, அனைத்துலக ஹலால் மாநாடு

போன்ற நிகழ்வுகளை மாநில ஏற்பாடு செய்திருந்ததாக சட்டமன்றத்தில்

இன்று கேள்வி நேரத்தின் போது அவர் தெரவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.