ஷா ஆலம், நவ. 21 – எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை உலு லங்காட் நாடாளுமன்ற நிலையிலான தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு செமினி சமூக மண்டபத்தில் நடைபெறும்
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு மாலை 6.00 தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.
இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி அம்சான் அழைப்பு விடுத்தார்.
இந்த தீபாவளி நிகழ்வில் விருந்து உபசரிப்போடு கலை கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான பல நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.


