பெட்டாலிங் ஜெயா, நவ 20: மொத்தம் 90 உணவு வளாகங்கள் மற்றும் 29 பொது கழிப்பறைகள் தூய்மையான பகுதி என அங்கீகாரத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியிடம் இருந்து பெற்றன.
குறிப்பிட்ட அனைத்து வளாகங்களும் அதிக தூய்மையுடன் இருக்கின்றன, அதாவது உணவு வளாகங்கள் 86 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மற்றும் பொது கழிப்பறைகள் (91 சதவீதம்) என்ற மதிப்பெண்களை பெற்றுள்ளதாக மேயர் கூறினார்
"இந்த அங்கீகாரம், உணவு வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பறைகளின் அளவுகோல்களின் அடிப்படையில் தூய்மையைப் பராமரிக்கும் நடத்துபவர்களின் முயற்சியைப் பாராட்டுவதற்காக வழங்கப்படுகிறது.
"தேர்வு அளவுகோல்கள் தூய்மை, உணவு தரக் கட்டுப்பாடு, பெர்மிட் நிபந்தனைகளுக்கு இணங்குதல், சுற்றுச்சூழல் மற்றும் வாடிக்கையாளர் நட்பு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது" என்று முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்
இன்று எம்பிபிஜே தலைமையகத்தில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு உணவு மற்றும் சுத்தமான கழிவறை வளாக விருது வழங்கும் விழாவை நிறைவேற்றிய பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை, சுபாங் ஜெயா மற்றும் ஷா ஆலம் மாநகராட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் மதிப்பீடு செய்யப்பட்டது என்று முகமட் ஜாஹ்ரி கூறினார்.
"இந்த திட்டத்தின் மூலம், நச்சுணவு, உணவு மற்றும் பானத்தில் பரவும் நோய்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நம்பப்படுகிறது. இதனால் நுகர்வோருக்கான சுத்தமான மற்றும் வசதியான சூழலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.
"இது மற்ற தொழில் முனைவோருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். மேலும், பெட்டாலிங் ஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள பிற உணவு வளாகங்கள் மற்றும் பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கும் பங்களிக்க முடியும்" என்று அவர் கூறினார்.


