கோலாலம்பூர், நவ 20: நவம்பர் 14 அன்று டத்தாரான் சன்வே, கோத்தா டாமன்சாரா, பெட்டாலிங்கில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட மூன்று சம்பவங்களில் தொடர்புடைய சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடந்ததாக நம்பப்படும் இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பான புகார் தனது தரப்பிற்கு கிடைந்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஷாருல்நிஜாம் ஜாபர் கூறினார்.
திருடப்பட்ட பொருட்களில் இரண்டு மடிகணினிகள், ஒரு டேப்லெட்,ஏடிஎம் கார்டுகள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் என மொத்தம் 4,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நவம்பர் 17 அன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், குற்றவியல் சட்டம் 379வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
"சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் அல்லது பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-7966 2222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.
- பெர்னாமா


