மிகவும் குறைந்த நிலையில் உள்ளதோடு முற்றுகையிடப்பட்ட வட
பகுதிகளில் உதவிப் பொருட்களை விநியோகிப்பது முற்றிலும்
சாத்தியமற்றதாக இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின்
மனிதாபிமான உதவி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்கா இராணுவ உதவிகள் கட்டுப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக
காஸா பகுதியில் மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் தடுக்கவில்லை
என்று இந்த வார தொடக்கத்தில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கு
முரணாக ஐ.நா. அதிகாரியின் இந்த கருத்து அமைந்துள்ளது.
அதே சமயம், காஸாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு
தாங்கள் அரும்பாடு பட்டு வருவதாக இஸ்ரேலும் கூறியிருந்தது.
மனிதாபிமான உதவிகள் குறித்து நீங்கள் சிந்திப்பதாக காட்டும் அனைத்து
குறியீடுகளும் எங்கள் கண்ணோட்டத்தில் தவறான திசையில்
செல்கின்றன என்று அந்த அதிகாரி சொன்னார்.
மனிதாபிமான உதவிகள் மேம்படும் உள்ளனவா என்று நிருபர்கள் எழுப்பிய
கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மனிதாபிமான உதவிக்கான அணுகல் மிகவும் குறைந்த அளவில் உள்ளது.
குழப்பம், துன்பம், விரக்தி, மரணம், அழிவு இடப்பெயர்வு ஆகியவை
உயர்ந்த பட்ச நிலையில் உள்ளன என்றார் அவர்.
இஸ்ரேலின் ஊடுருவல் காரணமாக வட காஸாவில் குடியிருப்போர் தென்
காஸாவுக்கு இடம் பெயரும்படி வலியுறுத்தப்படுவது குறித்து அவர்
கவலை தெரிவித்தார்.


