சிட்னி, நவ 13 - எரிமலை வெடித்து சிதறியதால் பரவிய சாம்பல் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கும் இந்தோனேசியாவின் பாலி மாநிலத்திற்கும் இடையே பயணம் மேற்கொண்ட விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக ஷின் ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.
ஆஸ்திரேலியாவின் மூன்று பெரிய விமான நிறுவனங்களான குவாந்தாஸ், விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் ஜெட்ஸ்டார் ஆகியவை நேற்றும் இன்றும் பாலிக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானப் பயணங்களை ரத்து செய்தன அல்லது தாமதப்படுத்தின.
குவாந்தாஸின் துணை நிறுவனமான ஜெட்ஸ்டார் ஆஸ்திரேலியாவில் இருந்து பாலியின் டென்பசார் விமான நிலையத்திற்கு செவ்வாய் மாலை தொடங்கி இன்று வரை வரை தனது அனைத்து விமானச் சேவைகளையும் ரத்து செய்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி மலையால் ஏற்பட்ட எரிமலை சாம்பல் காரணமாக பாலிக்கு செல்வதும் அங்கிருந்து வெளியேறுவதும் தற்போது பாதுகாப்பாக இல்லை என்று அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


