கோலாலம்பூர், நவ. 8 - லெபனானில் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தில் மலேசியப் படைப்பிரிவைச் சேர்ந்த (மல்பாட்) மொத்தம் 6 பேர் காயமடைந்தது உறுதி செய்யப்பட்டது.
மல்பாட் 850-12 வீரர்கள் பெய்ரூட்டில் இருந்து முகாமுக்கு சென்று கொண்டிருந்த போது லெபனானின் சைடா ஸ்டேடியம் அருகே வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெய்ரூட் நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றொரு சிவிலியன் வாகனத்தை குறிவைத்து இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகவும் அதில் மல்பாட் 850-12 உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்திற்கும் சேதம் ஏற்பட்டதாகவும் மலேசிய ஆயுதப் படைத் தலைமையகம் அறிவித்தது.
இச்சம்பவத்தின் விளைவாக, மல்பாட் 850 அமைதிப் படையைச் சேர்ந்த மொத்தம் ஆறு உறுப்பினர்கள் காயமடைந்தனர். ஐந்து உறுப்பினர்கள் பல்வேறு சிறிய காயங்களுக்கு ஆளாகினர். அவர்களில் ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டது என்று அறிக்கை கூறியது.
கையில் காயமடைந்த மல்பாட் உறுப்பினரை உடனடியாக சைதாவில் உள்ள ஹமூட் மருத்துவமனைக்கு மல்பாட் 850-11 மருத்துவ அதிகாரி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றதாக ஆயுதப்படை தெரிவித்தது.


