பெய்ரூட், நவ. 7- லெபனானின் பால்பெக்-ஹெர்மேல் பிரதேசத்தில்
இஸ்ரேலியப் படைகள் நேற்று மேற்கொண்டத் தாக்குதலில் குறைந்தது 30
பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
பெக்கா பள்ளத்தாக்கிலுள்ள அல்-எய்ன் நகர் மீது மேற்கொள்ளப்பட்டத்
தாக்குதலில் எழுவர் உயிரிழந்ததாக பாஷிர் கோர் பிராந்திய ஆளுநரை
மேற்கோள் காட்டி பாலஸ்தீன வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் டெய்ஹா மாவட்டத்தை குறி வைத்து இஸ்ரேல்
மேற்கொண்டத் தாக்குதலில் கட்டிடங்கள், கட்டமைப்புகள், விமான
நிலையச் சாலைகள் ஆகியவை கடுமையாகச் சேதமடைந்ததாக அச்செய்தி
கூறியது.
இது தவிர, தென் லெபனானில் உள்ள பல நகரங்கள் மீது இஸ்ரேல்
விமான மற்றும் ராக்கெட் தாக்குதல்களையும் நடத்தியது.
மேலும் லெபானின் கிழக்கு மற்றும் தென் நகரங்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் பொது சொத்துகளுக்கு பெரும்
சேதம் ஏற்பட்டது.


