காசா, அக்டோபர் 10: கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப்
படைகள் காசா பகுதியில் மூன்று தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 45
பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 130 பேர் காயமடைந்ததாகவும்
மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7, 2023 இல் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் இறந்த
பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 42,010 ஆக அதிகரித்துள்ளது. மேலும்
97,720 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள்
உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் சிவில்
பாதுகாப்புக் குழுக்களின் இயக்கத்தைத் தொடர்ந்து தடுப்பதால்,
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய அல்லது தெருக்களில் கிடக்கும் பல
உடல்களை இன்னும் கொண்டு வர முடியவில்லை.
– பெர்னாமா-வாஃபா


