காஸா, அக் 3 - காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் கடந்தாண்டு
அக்டோபர் 8ஆம் தேதி முதல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில்
இதுவரை 41,689 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ
வட்டாரங்கள் நேற்று கூறின.
அந்த கோரத் தாக்குதல்களில் 96,625 பேர் காயமடைந்துள்ளதாக அந்த
மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி பாலஸ்தீன செய்தி
நிறுவனமான வாஃபா தெரிவித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல்களில் மேலும் 51 பேர்
பலியானதோடு 165 காயமடைந்தனர் என அது குறிப்பிட்டது.
மீட்புப் பணியாளர்கள் நெருங்க முடியாத காரணத்தால் மேலும் பலர்
கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியிலும் சாலைகளில் சிக்கித் தவிப்பதாக
அந்த செய்தி நிறுவனம் மேலும் கூறியது.


