காஸா, செப். 16- காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 41,206 பேராக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தனர்.
இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியானதோடு மேலும் 57 பேர் காயமுற்றதாக அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.
இந்த புதிய மரண எண்ணிக்கையுடன் சேர்த்து இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 41,206 பேராக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி முதல் நிகழ்ந்து வரும் போரில் 95,337 பேர் காயமுற்றுள்ளதாக அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.


