கோத்தா கினாபாலு, செப். 15 - இங்குள்ள பாடாங் மெர்டேக்காவில் நாளை நடைபெறவிருக்கும் மலேசியா தினக் கொண்டாட்டம் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் "மிகவும் சிறப்பு வாய்ந்ததாக" இருக்கும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
இந்நிகழ்வில் பல சீரமைப்புகள் 2024 தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் கொண்டாட்ட முதன்மைக் குழுத் தலைவரான ஃபாஹ்மி சொனனார்.
இந்த கொண்டாட்டம் மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக பங்கேற்பாளர்களிடமிருந்து நாங்கள் கருத்துகளைப் பெற்ற பிறகு ஆடியோ குறைபாடுகள் உட்பட சில சிக்கல்கள் கவனிக்கப்படும் என்று அவர் நேற்று இரவு பாடாங் மெர்டேக்காவில் நடைபெற்ற நிகழ்வின் முழு ஒத்திகைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வரலாற்று நிகழ்வில் மலேசியா தினத்தை கொண்டாடும் வகையில் சிறந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளை நாங்கள் படைக்கவுள்ளோம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நாளை நடைபெறும் கொண்டாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் பாடாங் மெர்டேகாவுக்கு அழைக்கிறோம் என்று சபா மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.


