சிங்கப்பூர், செப். 9- சிங்கப்பூர் அரசு இம்மாதம் 9 முதல் 14 வரை அனைத்து தரை, வான் மற்றும் கடல் மார்க்க நுழைவாயில்களில் பாதுகாப்புச் சோதனைகளை வலுப்படுத்தியுள்ளது.
இப்பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து தரை, வான் மற்றும் கடல் நுழைவாயில்கள் வழியாக வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் மீது மேம்பட்ட பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூரின் குடிநுழைவு மற்றும் ஆய்வு ஆணையம் (ஐ சி.ஏ.) அறிவித்துள்ளது.
இந்த மேம்படுத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் காரணமாக சோதனைச் சாவடிகளில் பயணிகள் தாமதத்தை எதிர்நோக்க வேண்டிவரும் என்று ஐ.சி.ஏ. தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள காரணங்களை அது விவரிக்கவில்லை.
ஆசிய பசிபிக் பயணத்தின் இறுதிக்கட்டமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் செப்டம்பர் 11 முதல் 13 வரை சிங்கப்பூர் செல்ல உள்ளார்.


