விளாடிவோஸ்டோக் (ரஷ்யா), செப்டம்பர் 7: மலேசியாவிற்குள் அதிக ரஷ்ய நிறுவனங்கள் நுழையும் மற்றும் இரு தரப்புக்கும் இடையே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என மலேசியா நம்புகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் RIA நோவோஸ்டி மற்றும் RT, ஸ்புட்னிக் ஆகியவற்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
"ரஷ்யாவுடன்,அதிக சுற்றுலா, தொழில் விஸ்தரிப்பு சாத்தியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இப்போது நாங்கள் ரஷ்யாவில் உள்ள பல பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அவை, மலேசியாவிற்கு வரவும், குறிப்பாக சுற்றுலா அதிகரிக்கவும் நன்மைகள் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
"மலேசிய சுற்றுலா பயணிகள் ரஷ்யாவுக்கு செல்வதை நாங்கள் எளிதாக்குவோம்" என்று கிழக்குப் பொருளாதார மன்றத்திற்கு (EEF) வெளியே கூறினார்.
கிழக்கு பொருளாதார மன்றம் செவ்வாய் முதல் வெள்ளி வரை நடைபெறுகிறது. இது பசிபிக் கடற்கரையில் உள்ள ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் உள்ள தூர கிழக்கு கூட்டாட்சி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படுகிறது. ஸ்புட்னிக் EEF 2024 இன் தகவல் பங்குதாரர்.


