காஸா, ஆக. 28- காஸா தீபகற்பத்தில் உள்ள குடும்பங்களைக் குறி வைத்து இஸ்ரேலியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று இனப்படுகொலைகளை நிகழ்த்தியுள்ளன. இத்தாக்குதல்களில் 41 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 113 பேர் காயமடைந்தாக மருத்துவ வட்டாரங்கள் கூறின.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 40,476 பேராக உயர்ந்துள்ளதோடு மேலும் 93,647 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபா தெரிவித்தது.
இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் பொது தற்காப்பு படையினர் செல்வதை இஸ்ரேலிய துருப்புகள் தொடர்ந்து தடுத்து வருவதால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக் கூடும் என மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டன.


