ANTARABANGSA

தற்காலப் பிரச்சனைகளைக் கையாள ஆசியான் பங்காளித்துவத்தை வலுப்படுத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்து

20 ஆகஸ்ட் 2024, 4:52 AM
தற்காலப் பிரச்சனைகளைக் கையாள ஆசியான் பங்காளித்துவத்தை வலுப்படுத்த வேண்டும் - இந்தியா வலியுறுத்து

புதுடில்லி, ஆக. 20 - ஆசியானுடன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் நவீனப்படுத்தப்படும் பங்காளித்துவத்தை எடுத்துரைத்த இந்தியா, இன்றையைச் சவால்களை ஆக்ககரமான முறையில் கையாள அவர்களின் ஒத்துழைப்பை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

உலகளாவிய வடிவமைப்பு மாற்றத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அம்சங்களில் புறநிலை சார்ந்த தொடர்பு, மின்பாதை மற்றும் இலக்கவியல் ஒத்துழைப்பும் அடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் பருவநிலை மாற்றம், கடல்சார் பாதுகாப்பு போன்றவை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக விளங்கவில்லை. இப்போது இவ்விவகாரம் குறித்து ஆசியான் நாடுகளுடன் நாம் விவாதித்து வரும் வேளையில் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனும் இது குறித்து விவாதிக்கவுள்ளோம் என்று அவர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற நான்கு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடல் (குவாட்) திட்டத்தின் கீழ் வருகை புரியும் இந்தோ-பசிபிக் நாடுகளின் செய்தியாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குவாம் என்பது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பன்முக கட்டமைப்பாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.