ANTARABANGSA

தாய்லாந்து பிரதமராக பய்தோங்தார்ன் ஷினாவத்ரா நியமனம்- மன்னர் ஒப்புதல்

18 ஆகஸ்ட் 2024, 3:39 PM
தாய்லாந்து பிரதமராக பய்தோங்தார்ன் ஷினாவத்ரா நியமனம்- மன்னர் ஒப்புதல்

பேங்காக், ஆக  18 - தாய்லாந்து  நாடாளுமன்றம்  பய்தோங்தார்ன் ஷினாவத்ரா பிரதமராகத் தேர்ந்தெடுத்த இரண்டு நாட்களுக்குப் பி ன்   தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் இன்று அவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.

 இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையை அமைப்பதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னரின் இந்த  சடங்குப்பூர்வ  ஒப்புதல் சாசனத்தை   பேங்காக்கில் நடந்த நிகழ்வில் பிரதிநிதிகள் சபையின் செயலாளர் அபத் சுகானந்த் வாசித்தார்.

அதிகாரப்பூர்வ உடையணிந்திருந்த பய்தோங்தார்ன்    மன்னர் வஜிரலோங்கோர்னின் உருவப்படத்தின் முன் மண்டியிட்டு  மரியாதை செலுத்தினார்.  முன்னதாக அவர்,  தன்னை பிரதமராக அங்கீகரித்ததற்காக மன்னர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அரசு நிர்வாகத்தின் தலைவர் என்ற முறையில்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுடன் இணைந்து எனது கடமையை திறந்த இதயத்துடன் செய்வேன் என்று அவர் கூறினார்.

நான் எல்லா கருத்துக்களையும் கேட்பேன். அப்போதுதான்  நாம் ஒன்றாக நாட்டை

நிலைத் தன்மையுடன் முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தாய்லாந்துப் பிரதமர் ஷிரேத்தாதாவிஷின் அரசியலமைப்பு நீதிமன்றத்தால்  பதவி நீக்கம் செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு 37 வயதான  பய்தோங்தார்ன் தாய்லாந்தின் பிரதமராகியுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.