பாரிஸ், ஆகஸ்ட் 9– பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 13 வது நாளான நேற்று அமெரிக்கா பதக்க வரிசையில் தனது முதல் நிலையை தற்காத்து வருகிறது. அமெரிக்கா நேற்று ஒரே நாளில் 3 தங்கம் 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பெற்று முதல் இடத்தை தற்காத்துக் கொண்ட வேளையில் நேற்று சீனா 2 தங்கம் மற்றும் 2 வெள்ளி ,2 வெண்கலம் பதக்கம் பெற்று பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.



