பாரிஸ், ஆகஸ்ட் 7 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 11 வது நாளான நேற்று பதக்க வரிசையில் அமெரிக்கா மீண்டும் தனது முதல் நிலையை தற்காத்துக் கொண்டது. அமெரிக்கா நேற்று ஒரே நாளில் 4 தங்கம் 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் பெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது, அதே வேளையில் சீனா நேற்று 1 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கம் 2 வெண்கலம் பெற்று பதக்க பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பூப்பந்து போட்டிகள் தவிர்த்து சைக்கிள் ஓட்டம், கோல்ப், பலு தூக்குதல் படகு ஓட்டம் போன்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் மலேசியா இன்னும் பங்கு கொண்டாலும் பதக்கம் வெல்லும் நிலையை எந்த விளையாட்டு அடையும் என மலேசியர்கள் ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர்.



