MEDIA STATEMENT

மக்கோத்தா இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13 அன்று கூடுகிறது

4 ஆகஸ்ட் 2024, 2:14 PM
மக்கோத்தா இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்ய தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 13 அன்று கூடுகிறது

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - மக்கோத்தா இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் (இசி) ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளது.

ஜொகூர் சபாநாயகர் டத்தோ முகமட் புவாட் சர்காஷியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையத்தின் செயலாளரான டத்தோ இக்மல்ருடின் இஷாக், வெள்ளிக்கிழமை  பெற்றதாக  தெரிவித்தார்.  அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரீபா அசிசா சையத் ஜைன் காலமானதைத் தொடர்ந்து, மக்கோத்தா இருக்கை  அசாதாரண வெற்றிடம் கண்டது, குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பெற்றுள்ளது என்றார்.

"ஜோகூர் அரசியலமைப்பு 1895, பகுதி இரண்டு, பிரிவு (5), பிரிவு 23 இன் அடிப்படையில், தற்செயல்  காலியிடங்கள் குறித்த அறிவிப்பு பெற்ற 60 நாட்களுக்குள் அது நிரப்பப்பட வேண்டும்," என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சிறப்பு கூட்டத்திற்கு பிறகு நடைபெறும்..

63 வயதான ஷரிபா அசிசா, குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில்,  புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு, தனக்கு ஏற்பட்ட மூச்சு  திணறலுக்கு  தீவிர  சிகிச்சை எடுத்துக்கொண்ட போது வெள்ளிக்கிழமை இறந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.