ANTARABANGSA

ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை

31 ஜூலை 2024, 8:57 AM
ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் படுகொலை

ஷா ஆலம், ஜூலை 31-  ஹமாஸ் இயக்கத்தின்  தலைவர் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் படையை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானில் உள்ள தமது இல்லத்தின் மீது ஸியோனிச ஆட்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் இஸ்மாயில் கொல்லப்பட்டதாக ஹமாஸ்  அறிக்கை ஒன்றில்   தெரிவித்தது.

இன்று நடைபெறும்  இஸ்லாமிய குடியரசின் புதிய அதிபர் மசூட் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்மாயில் தெஹ்ரான் சென்றிருந்தார்.

இன்று காலை தெஹ்ரானில் உள்ள இஸ்மாயில் ஹனியேவின் இல்லம் தாக்கப்பட்டது. இதன் விளைவாக அவரும் மெய்க்காப்பாளர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த சம்பவம் இன்னும் விசாரணையில் உள்ளது. இதன் தொடர்பான விபரம்  விரைவில் அறிவிக்கப்படும்  என்று ஈரானின் புரட்சிகர காவலர் அமைப்பை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.