அங்காரா, ஜூலை 24: கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்திற்கு யுனிசெஃப்க்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் காசா பகுதியில் சுடப்பட்டதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
"காசா சோதனைச் சாவடிக்கு அருகில் நியமிக்கப்பட்ட இடத்தில் காத்திருந்தபோது, அமைப்பின் அடையாளத்துடன் தெளிவாகக் குறிக்கப்பட்ட இரண்டு யுனிசெஃப் வாகனங்கள் சுடப்பட்டன," என மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவிற்கான யுனிசெஃப் பிராந்திய இயக்குனர் அடீல் கோடர் X பக்கத்தில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வாகனங்கள் "ஒரு குழந்தை உட்பட ஐந்து சிறுவர்களை அவர்களின் தந்தையுடன் மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் இருந்தது" என்று அவர் கூறினார்.
இருப்பினும், யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
"அக்குழு சிறுவர்களைப் பாதுகாப்பாக அனுப்பியது" என்று ஐ.நா அதிகாரி கூறினார்.
கடந்த 12 வாரங்களில் காசாவில் மனிதாபிமானப் பணியில் யுனிசெஃப் வாகனம் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இது என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
அக்டோபர் 7 முதல் காஸாவில் தொடரும் கொடூரமான தாக்குதல்களுக்கு மத்தியில் இஸ்ரேல் சர்வதேச கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது.
இத்தாக்குதலில் 39,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். கிட்டத்தட்ட 90,000 பேர் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- பெர்னாமா-அனடோலு


