ECONOMY

 பொருளாதார மண்டலத் திட்டத்தை உருவாக்க RM15.6 மில்லியன்  தனியார்  நிதி

12 ஜூலை 2024, 12:39 PM
 பொருளாதார மண்டலத் திட்டத்தை உருவாக்க RM15.6 மில்லியன்  தனியார்  நிதி

ஷா ஆலாம், ஜூலை 12: சிலாங்கூர் கடல்சார் நுழைவாயில் பொருளாதார மண்டலத் திட்டத்தை உருவாக்க பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாட் மொத்தம் RM15.6 மில்லியன் நிதி வழங்கியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

ஒப்பந்தத்தின் படி நிதி ஆதாரங்களை பெறுவது குறிப்பிட்ட நிறுவனத்தின் பொறுப்பு என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"எல்.எல்.பி.எஸ்.பி மற்றும் பெர்ஜெயா லேண்ட் பெர்ஹாட் இடையேயான கூட்டு முயற்சியால் 27 ஜனவரி 2021 அன்று கையொப்பமிடப்பட்ட சந்தா மற்றும் பங்குதாரர்கள் ஒப்பந்தம் மூலம் லாண்டாசன் லுமாயான் பெர்ஜெயா எஸ்.டி.என் பிஎச்டி (எல்எல்பிஎஸ்பி) ஐ வெற்றிகரமாக நிறுவப்பட்டது.

"அவர்கள் உள்கட்டமைப்பு கட்டுமானம், மேம்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தல், நில பிரீமியங்களுக்கான கட்டணம் செலுத்துதல் மற்றும் கிள்ளான் நதியை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக அப்பணத்தை செலுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார்.

நேற்று மாநில அமர்வில் முதல் சிலாங்கூர் திட்ட மத்தியக்கால ஆய்வு மீதான  விவாதத்தின் போது பெர்ஜாயா லேண்டில் போதிய நிதி இல்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்தார்.

ஷா ஆலம் செக்‌ஷன் 24இல் உள்ள 26.29 ஏக்கர் நிலம் மே 20 அன்று ஷா ஆலம் மாநகராட்சியால் 'நதிக்கரை' மேம்பாட்டு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப் பட்டதாக அமிருடின் மேலும் கூறினார்.

"இந்த முழு வளர்ச்சியில் 1,922 வீடுகள் உள்ளடங்கியுள்ளன. இதில் 40 சதவிகிதம் மலிவு விலை வீடுகளாக உருவாக்கப்பட வேண்டும்.

"நிலம் மற்றும் கூடுதல் ஒப்புதல்கள் தொடர்பான விவகாரங்கள் தீர்க்கப்பட்ட பிறகு, இத்திட்டம் 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தொடங்கப்படும்," என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.