MEDIA STATEMENT

கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் பாய்ந்தது- மூவர் மயிரிழையில் உயிர்த் தப்பினர்

8 ஜூலை 2024, 7:34 AM
கட்டுப்பாட்டை இழந்த கார் ஆற்றில் பாய்ந்தது- மூவர் மயிரிழையில் உயிர்த் தப்பினர்

கங்கார், ஜூலை 8- கட்டுப்பாட்டை இழந்த புரோட்டோன் பெசோனா கார் ஆற்றில் பாய்ந்த சம்பவத்தில் கணவன், மனைவி மற்றும் மகன் ஆகியோர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பினர். இச்சம்பவம்  கங்கார்-அலோர்ஸ்டார் சாலையில் கம்போங் தோக் பூலாவ் அருகே நேற்று நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க கணவன், மனைவி மற்றும் அவர்களின் மூன்று வயது மகன் ஆகியோர் பொது மக்களால் காப்பாற்றப்பட்டதாக பெர்லிஸ் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உயர் ஆணையர் 1 முகமது ஜைடி மாஹாட் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 3.11 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சிம்பாங் அம்பாட் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு குழுவினர் ஐந்து நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது சம்பந்தப்பட்ட மூவரும் பொது மக்களால் காப்பற்றப்பட்டுவிட்டனர். எனினும் மயக்க நிலையில் காணப்பட்ட தாய் மற்றும் மகனுக்கு தீயணைப்பு வீரர்கள் முதலுதவி சிகிச்சை வழங்கினர். பின்னர் அவர்கள் மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.

இந்த மீட்பு நடவடிக்கை மாலை 4.00 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அவர் மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.