அலோர் காஜா, ஜூலை 3- உள்துறை அமைச்சின் கீழுள்ள அமலாக்க நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் தாங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு உள் விசாரணைகள் தொடர்பான விபரங்களையும் பொதுமக்களுக்கு வெளியிட வேண்டாம் என்று நினைவூட்டப்படுகிறார்கள்.
உள் விசாரணை அறிக்கைகளை பரப்பும் அதிகாரிகள் அல்லது உறுப்பினர்கள் தற்போதுள்ள சட்டங்களின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா கூறினார்.
எந்தக் குற்றத்தைப் (அதிகாரிகள் மற்றும் அமலாக்க உறுப்பினர்கள்) புரித்தாலும் அவர்களுக்கு எதிராக தற்போதுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கும் இது முக்கியம். எந்த தகவலைப் பெற்றாலும் அது தகவலை சரியான தளத்தின் வழி பார்க்கவும். அதுவே சிறந்தது என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற தேசிய அளவிலான 2024 மலேசிய தன்னார்வத் துறையின் (ரேலா) 52ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைக் கூறினார்.
ஆட்டிஸம் குறைபாடு கொண்ட சிறுவனான ஜெய்ன் ரய்யான் அப்துல் மதினின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கையின் ஒரு பகுதி எனக் கூறப்படும் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது குறித்து அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.


