ANTARABANGSA

தாய்லாந்தின் யாலாவில் குண்டு வெடிப்பு- ஒருவர் மரணம், எட்டு போலீஸ்காரர்கள் காயம்

1 ஜூலை 2024, 3:52 AM
தாய்லாந்தின் யாலாவில் குண்டு வெடிப்பு- ஒருவர் மரணம், எட்டு போலீஸ்காரர்கள் காயம்

யாலா (தாய்லாந்து), ஜூலை 1- தென் தாய்லாந்தின் யாலா நகரில் நேற்று

காலை காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் பெண்மணி ஒருவர்

உயிரிழந்ததோடு எட்டு போலீஸ்காரர்கள் உள்பட 18 பேர் காயமுற்றனர்.

போலீஸ் குடியிருப்பின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரில்

பொருத்தப்பட்டிருந்த சொந்தமாக தயாரிக்கப்பட்ட குண்டு உள்நாட்டு

நேரப்படி காலை 10.10 மணியளவில் வெடித்ததாக பன்னாங் சாத்தா

போலீஸ் தலைவர் ரானோன் சுராவிட் கூறினார்.

அந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் போலீஸ் குடியிருப்பும் எண்ணற்ற

கார்களும் பலத்த சோத்திற்குள்ளானதாக அவர் சொன்னார்.

இந்த சம்பவத்தில் 45 வயதுடைய பெண்மணி ஒருவர் உயிரிழந்ததோடு

மேலும் 18 பேர் காயமுற்றனர். அவர்களில் ஐவரின் நிலைமை

கவலைக்கிடமாக உள்ளது என்றார் அவர்.

காயமடைந்த அனைவரும் பன்னான் சாத்தா மருத்துவமனையில்

சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தாக்குதலுக்குப் பொறுப்பான தனி நபர் அல்லது கும்பலை கண்டு

பிடிக்கும் முயற்சியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர்

தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.