ECONOMY

சிப்ஸ் தென்கிழக்கு ஆசியா பொருளாதார மேம்பாட்டுக்கான தளம் .

26 ஜூன் 2024, 3:39 AM
சிப்ஸ் தென்கிழக்கு ஆசியா பொருளாதார மேம்பாட்டுக்கான தளம் .

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 25: சிலாங்கூர் சர்வதேச வணிக உச்சி மாநாட்டின் (SIBS) அமைப்பு  பொருளாதார உயர்வுக்கு  சரியான தளம், தென்கிழக்கு ஆசியா ரீதியிலும் முதலீட்டு நடவடிக்கைகள் வழி  பொருளாதாரத்தை உயர் நிலைக்கு உயர்த்தும் திறன் கொண்டவை.

ஒரு முழுமையான வணிக  கட்டமைப்பு வழங்குவதன் மூலம், மலேசியாவை மட்டுமின்றி  தென்கிழக்கு ஆசியாவையே ஒரு வளர்ந்த கண்டமாக மாற்றுவதற்கான ஒரு தளமாகும்  என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கருதுகிறார்.

"SIBS மலேசியாவை மட்டுமல்ல, தென்கிழக்கு ஆசியாவிலும் கவனம் செலுத்துகிறது. சரியான படிகள் மற்றும் உத்திகளின் மூலம் தென்கிழக்கு ஆசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தி, மிகவும் முன்னேறிய கண்டங்களில் ஒன்றாக மாற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்.

" இதன் ஆக்ககரமான  மேம்பாட்டின் வழி  அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு வலையமைப்பை உருவாக்க முடியும்,  இது வெற்றி அடையும் என சிலாங்கூர் அரசாங்கம்  நம்புகிறது," என்று அவர் SIBS இன் துவக்கத்துடன் இணைந்து ஒரு வீடியோ பதிவில் கூறினார்.

முதலீடு, வர்த்தகம் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை ஆட்சிக்குழு  உறுப்பினர் இங் ஸீ ஹனால்  இன்று தொடங்கப்பட்டது, SIBS இந்த ஆண்டு இரண்டு முறை மொத்தம் RM7 பில்லியன் முதலீட்டை இலக்காகக் கொண்டு  கோலாலம்பூர் கன்வென்ஷன் சென்டரில் (KLCC) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தொடர் அடுத்த ஜூலை 25 முதல் 27 வரை சிலாங்கூர் தொழில் பூங்கா கண்காட்சி (ஸ்பார்க்) மற்றும் சிலாங்கூர் ஆசியான் வணிக மாநாடு (SABC) ஆகியவற்றை மையமாகக் கொண்டது.

இரண்டாவது தொடர் அக்டோபர் 16 முதல் 19 வரை சிலாங்கூர் இன்டர்நேஷனல் எக்ஸ்போ (உணவு மற்றும் குளிர்பானம்) மற்றும் சிலாங்கூர் இன்டர்நேஷனல் எக்ஸ்போ (மருந்து), ஸ்மார்ட் சிட்டி மற்றும் சிலாங்கூர் டிஜிட்டல் எகானமி ஆகியவற்றை உள்ளடக்கியது.

சர்வதேச மாநாடு 80 நாடுகளில் இருந்து 60,000 வருகையாளர்களை ஈர்ப்பதுடன், 1,300 க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.