ECONOMY

அன்வர், முகைதீன் அவதூறு வழக்கு வாபஸ்

15 ஜூன் 2024, 1:14 AM
அன்வர், முகைதீன் அவதூறு வழக்கு வாபஸ்

கோலாலம்பூர், ஜூன் 14: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் ஆகியோருக்கிடையேயான தனிப்பட்ட தகராறுகள் மற்றும் அவதூறு வழக்கை  நிறுத்த ஒப்புக்கொண்டனர்.

அன்வர் மற்றும் முகைதீன் ஆகியோர் அவரவர் முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில், அவதூறு வழக்கின் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரைகள் மற்றும் நாட்டின் தற்போதைய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக மக்களின் உயிர் வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இந்த விடயம் தொடர்பில் தொடர் அறிக்கைகள் எதனையும் வெளியிட வேண்டாம் என  இரு சாராரும் இணங்கி உள்ளதாகவும், இந்த தீர்மானம் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் என நம்புவதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பொது நல்வாழ்வு மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நீதித்துறை நிறுவனம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் பொருளாக இந்த விஷயம் பயன்படுத்தப்படாது என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் நம்புகின்றனர்" என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கெ அடிலான்  தலைவர் மற்றும் பெர்சத்து தலைவர் ஆகியோர் கூட்டறிக்கையில் உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட நீதிமன்ற அதிகாரிகளுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

முன்னதாக, ஃபெல்டா குடியேற்றவாசிகள் கடனில் முந்தைய PN அரசாங்கம் RM8.3 பில்லியனை தள்ளுபடி செய்யவில்லை என்று பிரதமர் கூறியது தொடர்பாக முகைதீன் RM200 மில்லியனுக்கு அன்வார் மீது வழக்கு தொடர்ந்தார்.

பக்காத்தான் ஹராப்பான் தலைவரான அன்வார், சிலாங்கூர்  அரசின்  பொருளாதார ஆலோசகராக இருந்த போது சிலாங்கூர் அரசாங்கத்திடம் இருந்து 15 மில்லியன் ரிங்கிட் சம்பளம் பெற்றதாக  டான் ஸ்ரீ முகைதீன் யாசின் கூறியதற்கு, அவர் மீது அன்வர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.