ANTARABANGSA

 மானியஉதவி நீக்கப்பட்ட பிறகு டீசல் வாகனங்களுக்கு மாதாந்திர பண உதவி திட்டம்

9 ஜூன் 2024, 4:30 AM
 மானியஉதவி நீக்கப்பட்ட பிறகு டீசல்  வாகனங்களுக்கு  மாதாந்திர பண உதவி திட்டம்

பெட்டாலிங் ஜெயா: தற்போதைய   மானியஉதவி நீக்கப்பட்ட பிறகு டீசல் விலை உயர்வை ஈடுகட்ட பூடி மடாணி திட்டத்தின் கீழ் 80% டீசல் பயனர்கள் மாதாந்திர பண உதவியைப் பெறுவார்கள்.

இரண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான், டீசல் பயன்பாட்டுத் தரவு மற்றும் புள்ளிவிவரத் துறையின் தரவுகளைப் படித்த பிறகு மாதாந்திர RM200 பண உதவி தீர்மானிக்கப்பட்டது என்றார்.

பூடி மடாணி திட்டம், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் MySubsidi டீசல் அமைப்பின் மூலம் இலக்கு டீசல் மானியத்தை வழங்குவதற்கான அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளை நிறைவு செய்கிறது.

சிறு விவசாயிகள் மற்றும் சிறு  தோட்ட உடமையாளர்கள் உட்பட டீசல் வாகனங்களின் தகுதியான தனிநபர் உரிமையாளர்கள் மாதம் 200 ரிங்கிட் பெறுவார்கள்.

ஒரு பெர்னாமா அறிக்கையில், அமீர் ஹம்சா, இலக்கு வைக்கப்பட்ட மானிய  திட்டத்தை செயல்படுத்துவது மடாணி பொருளாதார கட்டமைப்பில் மூன்று முக்கிய பகுதிகளை நிறைவேற்றுகிறது:

i.நாட்டின் வருவாயை விரிவுபடுத்துதல்,

II, மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துதல்.

III. நாட்டின் நிர்வாகத்தை மேலும் திறம்பட மேம்படுத்துதல்.

"தற்போதுள்ள கசிவுகளை நாம் குறைக்க முடிந்தால், நாட்டின் வருவாய் உயரும், மேலும் உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களுக்கு பயனளிக்க அதைப் பயன்படுத்தலாம்," என்று அவர் கூறினார்.

2019 இல் 1.4 பில்லியன் ரிங்கிட் மட்டுமாக இருந்த டீசல் மானியம் கடந்த ஆண்டு பத்து மடங்கு  உயர்ந்து 14.4 பில்லியனானது என்று அமீர் ஹம்சா கூறினார்.

டீசல் மானியத்தை மறுஆய்வு செய்வதன் மூலம் மதிப்பிடப்பட்ட RM4 பில்லியன் சேமிப்பு, பல்வேறு பொது சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்கு  உதவும்.  அது  அரசாங்கத்திற்கு அதிக நிதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

நேற்றைய நிலவரப்படி பூடி மடாணி திட்டத்தின் கீழ் ரொக்க மானிய உதவி பெற விவசாயிகள் மற்றும் சிறு-குறு உற்பத்தியாளர்கள் உட்பட 30,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு அறிக்கையில், ஜூன் 10 முதல் பெறுநர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் RM200 நேரடியாகப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பூடி மடாணி  மூலம் மானிய  உதவிப்பெற மே 28 ல்  பதிவு  தொடங்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.