ECONOMY

எரிபொருள் மானியம் மறுஆய்வு: அன்வாரின் கடினமான ஆனால் தைரியமான நடவடிக்கை

26 மே 2024, 7:34 AM
எரிபொருள் மானியம் மறுஆய்வு: அன்வாரின் கடினமான ஆனால் தைரியமான நடவடிக்கை
எரிபொருள் மானியம் மறுஆய்வு: அன்வாரின் கடினமான ஆனால் தைரியமான நடவடிக்கை
எரிபொருள் மானியம் மறுஆய்வு: அன்வாரின் கடினமான ஆனால் தைரியமான நடவடிக்கை

கோலாலம்பூர், மே 26 - எரிபொருள் மானியங்களை மறு ஆய்வு செய்வதற்கான முயற்சி, கடினமானது ஆனால் துணிச்சலான நடவடிக்கையை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்துள்ளார், மேலும் முந்தைய தலைவர்கள் போலல்லாமல், ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும் என்ற ஆசையை மீறிய செயல்  என்கிறார்கள்   பல பொருளாதார வல்லுனர்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம், அவர்  நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்துள்ளார், இதன் மூலம் டீசல் மானியத்தை மறு ஆய்வு செய்வதன் மூலம் ஆண்டுக்கு RM4 பில்லியன் சேமிப்பு கணிசமானது மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நீண்ட தூரம் செல்லும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஆனால் மிக முக்கியமாக, டீசல் மானியத்தை  மறுஆய்வு  செய்வது பல தசாப்தங்களாக நீடித்து நடந்துவரும்  கடத்தலை கட்டுப்படுத்தும் முக்கிய செயல், இது நீண்ட காலமாக  தினசரி மில்லியன் கணக்கான ரிங்கிட்டை  நாடு இழக்கச் செய்துள்ளது.

இதில் நேசர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்  பிரதமரை விமர்சித்துள்ளனர், ஆனால் அண்டை நாடுகளுக்கு அப்பட்டமான டீசல் கடத்தலை தடுக்க யாராவது முன் வர வேண்டும். முந்தைய தலைவர்கள் எடுக்காத கடினமான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை அன்வார் எடுத்துள்ளார்.

எரிபொருள் மானியங்களை பகுத்தாய்வு செய்வதில்  முன்னைய தலைவர்களின் தயக்கம், கடத்தல் மூலம் தொடர்ந்து பில்லியன் கணக்கான ரிங்கிட்  இழப்புக்கு  வழிவகுத்தது.

டீசல் மானிய  பகுத்தாய்வு அறிவிக்கும் போது அவர் கூறிய செய்தி தெளிவாக இருந்தது: அதாவது, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தொடர்ந்து டீசலுக்கு மானியம் உதவி செலுத்துவது நிலையானது அல்ல.

பகுத்தாய்வை விமர்சிப்பவர்கள், மில்லியன் கணக்கான ரிங்கிட்களை இழந்ததன் விளைவாக தொடர்ச்சியான கடத்தல்களை  கண்டுகொள்ளாமல்  கண்மூடித்தனமாக  இருந்தவர்கள்,  நாமும் அப்படியே இருக்க வேண்டு மென  எதிபார்க்கிறார்களா?  இன்னும் எத்தனை காலம் இதனை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறது.மக்களுக்கு  உதவ  வேண்டிய நாட்டின் வளம் , டீசல்  மானிய உதவியாக செலுத்தும் தொகை மனதை உலுக்குகிறது.

நிதி அமைச்சகத்தின் 2024 நிதிக் கண்ணோட்டத்தின் படி,  மலேசியாவின் மொத்த மானியச் செலவு 2010 இல் RM14.2 பில்லியனில் இருந்து 2022 இல் RM70.3 பில்லியனாக உயர்ந்தது. எரிபொருள் மானியங்களுக்கான மிகப்பெரிய பில் RM 52 பில்லியன் அல்லது மொத்த மானியங்களில் 74 சதவீதம் ஆகும்.

சந்தேகத்திற்கு இடமின்றி, சிலர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த சிக்கலைப் பயன்படுத்திக் கொள்வார்கள், ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய மானியங்கள் தாங்க முடியாதவை மற்றும் சார்பு கலாச்சாரத்தை மட்டுமே உருவாக்கும் என்பதை அவர்களால் மறுக்க முடியாது.

மலேசியாவின் எல்லைகளில் நடக்கும் அனைத்து கடத்தல்களாலும், நமது மலிவான எரிபொருளைப் பயன்படுத்தி தெற்கே உள்ள நமது அண்டை நாடுகளின் அதிக இலாபத்தை  அடைகின்றன.

ஆனால்,மானியப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கடந்த கால செய்கையின்  விளைவாக நாட்டின் கடன் மற்றும் பொறுப்புகள் RM1.5 டிரில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 82 சதவீதத்தை எட்டியுள்ளது.

ஹாங் லியோங் முதலீட்டு வங்கியின் கூற்றுப்படி, எரிபொருள் மானியங்களை அகற்றினால் எரிபொருள் விலைகள் RON95 க்கு 64 சதவீதமும், டீசலுக்கு 61 சதவீதமும் அதிகரிக்க வேண்டும் - இருந்தும் கூட  விலை புருனையைத் தவிர ஆசியாவில் இன்னும் குறைவாகவே உள்ளது.

பிரதமரின்  தற்போதைய  அறிவிப்பு முதலீட்டு வங்கி வருடாந்திர சேமிப்பு RM29 பில்லியனை மீட்கலாம் மற்றும் நிதிப் பற்றாக்குறையை GDP யில் (அரசாங்கத்தின் 2024 இலக்கு) 4.3 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாக குறைக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளது.

பணவீக்கத்தில், RON 95 மற்றும் டீசல் விலையில் ஒவ்வொரு 10 சதவீத அதிகரிப்பும் நுகர்வோர் விலைக் குறியீட்டை முழு ஆண்டு அடிப்படையில் 0.51 சதவீத புள்ளிகளால் உயர்த்தும் என்று மதிப்பிட்டுள்ளது.

தேசிய கருவூலத்தை மேம்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தவும் டீசல் மானியங்களை  மறுஆய்வு செய்ததற்காகவும், மடாணி அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புக்குப் பிறகு உரையாடல்கள் பெரும்பாலும் காலவரிசையில் கவனம் செலுத்துகின்றன, மறுஆய்வு  நடைமுறைப் படுத்தப்படுமா அல்லது அரசாங்கம் பணப்பரிமாற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

2024 பட்ஜெட்டில் மானிய மறுஆய்வு முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது அரசாங்கம் குறிப்பிட்ட தேதியை நிர்ணயிக்கவில்லை.  ஆயினும்கூட, டீசல் எரிபொருளில் தொடங்கி தீபகற்ப மலேசியாவில் உள்ள பயனர்களை மட்டுமே உள்ளடக்கிய சீரமைப்பு  இதற்கான முயற்சிகள் இந்த ஆண்டு தொடங்கும்.

சரக்குகள் மற்றும் சேவைகளின் விலைகளில் கடுமையான அதிகரிப்புக்கு எதிராக மக்களைக் கட்டுப்படுத்த, 10 வகையான பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் 23 வகையான சரக்கு போக்குவரத்து வாகனங்களை உள்ளடக்கிய வணிக டீசல் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தும் வர்த்தகர்களுக்கு டீசல் மானியங்களை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும்.

இதில் பஸ் மற்றும் டாக்ஸி நடத்துபவர்களும் அடங்குவர். குறிப்பிட்ட வகை மீனவர்களுக்கு டீசல் மானியத்தையும் அரசு தொடர்ந்து வழங்கும். பொறிமுறை இறுதி செய்யப்படவில்லை என்றாலும், இலக்குக் குழுக்களுக்கான பணப் பரிமாற்றத்துடன் மானிய விலை எரிபொருளையும் இணைக்கலாம் என்று சமீபத்திய அறிவிப்பு தெரிவிக்கிறது.

மானிய உதவிப்பெறும் டீசல் விவகாரத்தை கூர்ந்து ஆராயும் போது,  உழைப்பு செயலாக இருக்கும், அதாவது பல அமைச்சகங்கள், ஏஜென்சிகள், துறைகள் மற்றும் மாநிலங்களை உள்ளடக்கியிருப்பதால், அதைச் செய்வதை விட  சொல்வது எளிதாக இருக்கும்.

உதாரணமாக, மீன்பிடி, போக்குவரத்து மற்றும் சிறு தொழில் போன்ற துறைகள் மூன்று வெவ்வேறு அமைச்சகங்களின் கீழ் வருகின்றன; அவர்களுக்குள், பல பிரிவுகள் உள்ளன.

எனவே, மானிய உதவி எரிபொருள் - பல தசாப்தங்களாக மலேசிய சமூகத்தில் மிகவும் வேரூன்றியுள்ளது - அதற்கு கட்டுப்பாடு விதிப்பது ஒரு நாணயத்தைப் புரட்டுவது போல் எளிதானது அல்ல.

வறுமை ஒழிப்பு, யாரும் பின் தங்கி விடக்கூடாது என்பதில் அரசாங்கம் படிப்படியாக முன்னேறி வருகிறது என்பது தெளிவாகிறது.

டீசல் மானியத்தை மறுஆய்வு, செய்வதும் அவசரமாக இல்லாமல் சரியான வழிமுறை அமையும் போது செயல்படுத்தப்படும்.

வெளிப்படையாக, அனைத்து கொள்கை அமலாக்க நடவடிக்கைகளையும் போலவே, பிரச்சினையின் சிக்கலான தன்மை மற்றும் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரின் ஈடுபாடு காரணமாக கடுமையான பிரச்சனையாக இருக்கும்.

கேள்வி என்னவென்றால், மானியத்தை பகுத்தறிவு செய்வது கடத்தல் மூலமான கசிவுகளை நிறுத்துமா? சரி, முழுமையாக இல்லையா  என்பதே ?

அதே வேளையில் மானிய விலை எரிபொருளை, குறிப்பாக டீசலை கடத்துவதற்கான  மாற்று  வழிகளை, ருசி கண்டவர்கள், நேர்மையற்றவர்கள்  தொடர்ந்து கண்டுபிடிப்பார்கள்.

மனிதனின் தேவைகளுக்கு உலகில்   போதுமான அளவு வளம் இருக்கிறது ஆனால் அவரது பேராசைக்கு இல்லை என்ற மகாத்மா காந்தியின் மேற்கோளைப் போலவே, இதை முடிந்தவரை கட்டுப்படுத்த முடியும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.