ஷா ஆலம், மே 15: ஜாலான் சுங்கை லாலாங், செமிஞ்சேயில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் தற்காலிக பாலம் (பெய்லி பாலம்) கட்டுவதவதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுப்பணித் துறை, காஜாங் நகராண்மை கழகம் மற்றும் பல நிறுவனங்களுடன் இணைந்து புதிய பாலத்தை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டும் என்று உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் அசிம் தெரிவித்தார்.
"தற்போதைய நிச்சயமற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, இங்குள்ள சாலையைப் பயன்படுத்துவோர் கவனமாகவும், எப்போதும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் நேற்று ட்விட்டரில் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.


