MEDIA STATEMENT

கோல குபு பாருவில் இன்று காலை வானம் தெளிவாக இருக்கும்- மாலையில் அடை மழை பெய்யும்

11 மே 2024, 3:09 AM
கோல குபு பாருவில் இன்று காலை வானம் தெளிவாக இருக்கும்- மாலையில் அடை மழை பெய்யும்

ஷா ஆலம், மே 11- இடைத் தேர்தல் நடைபெறும் தினமான இன்று காலை கோல குபு பாருவில் வானிலை தெளிவாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

எனினும், மாலையில் அந்த வட்டாரத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று அத்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் மற்றும் எச்சரிக்கை www.met.gov.my  என்ற  மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று கோல குபு பாரு தொகுதி இடைத் தேர்தலில் ஒற்றுமை அரசு. பெரிக்கத்தான் நேஷனல், பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்) மற்றும் சயேச்சை இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. 

ஒற்றுமை அரசின் சார்பில் பாங் சோக் தா, பெரிக்கத்தான் நேஷனல் சார்பில கைருள் அஸ்ஹாரி சவுட், பி.ஆர்.எம். கட்சி சார்பில் ஹபிஷா ஜைனுடின் மற்றும் சுயேச்சையாக ங்காவ் கீ ஷின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

.கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.