ANTARABANGSA

மூவரை பலி கொண்ட தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது- ராஃபா மீது இஸ்ரேல் பதிலடி 

6 மே 2024, 4:41 AM
மூவரை பலி கொண்ட தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது- ராஃபா மீது இஸ்ரேல் பதிலடி 

கெய்ரோ, மே 6 - தென் காஸா  நகரான ராஃபா அருகே ஹமாஸ் ஆயுதப் பிரிவு நடத்திய ராக்கெட் தாக்குதலில் 3 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே சமயம், அங்கு   இஸ்ரேலிய துருப்புகள்  நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக   பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஸாவுக்குள் கெரெம் ஷாலோம் கடப்பு தாக்குதலுக்கு ஹமாஸின் ஆயுதப் பிரிவு நேற்று  பொறுப்பேற்றது. இத்தாக்குதலில் தங்களின் மூன்று வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

தெற்கு காஸாவில் உள்ள ராஃபாவிலிருந்து கடப்பு பகுதியை நோக்கி பத்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இதனால்  கடலோரப் பகுதிக்கு  டிரக்குகள் செல்வதற்கான வழி உதவுவதற்கான மூடப்பட்டுள்ளதாகவும் மற்ற வழிகள் திறந்துள்ளதாகவும் அது தெரிவித்தது.

தாங்கள் ஒரு இஸ்ரேலிய இராணுவத் தளத்தை கடக்கும் வழியில் ராக்கெட்டுகளை பாய்ச்சியதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு கூறியது, ஆனால் அது எங்கிருந்து பாய்ச்சப்பட்டது  என்பதை அந்த அமைப்பு  உறுதிப்படுத்தவில்லை.

பத்து லட்சத்திற்கும்  அதிகமான பாலஸ்தீனர்கள் எகிப்தின் எல்லைக்கு அருகில் உள்ள ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் ரஃபாவில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து வான்வழித் தாக்குதல்  நடத்தியது. இத்தாக்குதலில்  மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீன மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.