MEDIA STATEMENT

தந்தையின் பாலியல் பலாத்காரத்தால் மகள் கர்ப்பம்- கணவன்-மனைவி கைது

5 மே 2024, 6:07 AM
தந்தையின் பாலியல் பலாத்காரத்தால் மகள் கர்ப்பம்- கணவன்-மனைவி கைது

சிரம்பான், மே 5- தனது பன்னிரண்டு வயது முதல் தந்தையின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியதாக இருபது வயது இளம் பெண் ஒருவர் புகார். தந்தைக்கு  ஒரு குழந்தையை ஈன்றெடுத்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக கணவன் மற்றும் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த அடாதச் செயலை அப்பெண்ணின் தந்தை போர்ட்டிக்சன், கம்போங் சுவாவிலுள்ள தனது வீட்டில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் புரிந்து வந்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அய்டி ஷாம் முகமது கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு நாற்பது வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் தந்தை மற்றும் தாயார் போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.40 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் தன் தாயாரிடம் கூறிய போதிலும், இந்த தகாத உறவில் இரு பிள்ளைகளை அவர் ஈன்றெடுத்த நிலையிலும்  அத்தாய் அதைப் பொருட்படுத்தவில்லை. ஒரு குழந்தை பிரசவத்தின் போது உயிரிழந்து விட்டது. மற்றொரு குழந்தைக்கு மூன்று வயது ஆகிறது என்று அய்டி ஷாம் நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு போதைப்பொருள் தொடர்பில் முந்தையக் குற்றப்பதிவுகள் உள்ளதாக கூறிய அவர், இந்த புகார் தொடர்பாக தண்டனைச் சட்டத்தின் 376 பி பிரிவின் கீழ் விசாரணைக்கு அவ்விருவரும் ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்  என்றார்.

 

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.