ECONOMY

அழகிய தோற்றத்தால் அல்ல, அளப்பரிய சேவைகளால் மக்களின் மனம் கவர விரும்புகிறேன்- ஹராப்பான் வேட்பாளர் பாங் கூறுகிறார்

5 மே 2024, 3:11 AM
அழகிய தோற்றத்தால் அல்ல, அளப்பரிய சேவைகளால் மக்களின் மனம் கவர விரும்புகிறேன்- ஹராப்பான் வேட்பாளர் பாங் கூறுகிறார்

உலு சிலாங்கூர், மே 5- தனது தோற்றத்தை மூலதனமாகக் கொள்ளாமல் சிறப்பான சேவைகளை வழங்குவதன் வாயிலாக கோல குபு பாரு மக்களின் தனதைக் கவர தாம் விரும்புவதாக ஒற்றுமை அரசின் வேட்பாளர் கூறுகிறார்.

கடந்த ஒரு வார காலமாக இத்தொகுதியில்  மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் போது தாம் முன்வைக்கும் முக்கிய விஷயம் இதுவாகும் என்று பாங் சோக் தா (வயது 31) தெரிவித்தார்.

நான் அழககாக இருப்பதாக சிலர் கருதுகின்றனர். மேலும் சிலரோ நான் பருமனாகவும் அழகின்றியும் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், நான் புறத் தோற்றத்தைக் கொண்டு மக்களின் மனம் கவர நான் விரும்பவில்லை. காரணம், புறத் தோற்றம் காலத்தால் மாற்றம் மாறக்கூடியது. 

இங்குள்ள மக்கள் வளப்பத்துடன் வாழ்வதற்கான மேம்பாட்டை வலியுறுத்தும் செய்தியை மட்டுமே அவர்களிடம் சேர்ப்பிக்க விரும்புகிறேன். தொகுதி மக்கள் மறவாமல் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன் அவர் அவர் குறிப்பிட்டார்.

நிலையான அரசாங்கம், பொருளாதார மீட்சி மக்களுக்கு உதவி ஆகியவற்றை இலக்காக கொண்ட ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கையை மக்களிடம் சேர்ப்பதற்காக இறுதி நிமிடம் வரை நான் பிரசாரம் செய்வோன் என்றார் அவர்.

பாரிசான் நேஷனல் மற்றும் மஇகாவின் ஆதரவுக் கட்சியான ஐ.பி.எஃப். ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற ஒற்றுமை பரப்புரை நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, இந்நிகழ்வில் உரையாற்றிய ஐ.பி.எஃப். தலைவர் டத்தோ டி. லோகநாதன், கட்சித் தலைவர்களும் உறுப்பினர்களும் கோல குபு தொகுதியில் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

இந்த தொகுதியில் 700க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் அதே வேளையில் சிறிய அளவில் கூட்டங்களையும் நடத்தி வருகிறோம் என்றார் அவர்.

இந்த பிரசார கூட்டத்திற்கு வேட்பாளர் நேரில் வருகை புரிந்தது எங்களுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. வேட்பாளர் இல்லாத பட்சத்திலும் எங்களின் பிரசாரம் தொடரும் என அவர் சொன்னார்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.