ECONOMY

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? ஊடகச் செய்திக்கு அமைச்சர் மறுப்பு

5 மே 2024, 2:30 AM
பெட்ரோல், டீசல் விலை உயர்வா? ஊடகச் செய்திக்கு அமைச்சர் மறுப்பு

ஜோர்ஜ் டவுன், மே 5- பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்ற அனைத்துலக ஊகடக் செய்தியை அரசாங்கப் பேச்சாளரான அவர் மறுத்தார்.

கடந்த வாரத்திலும், அதற்கு முந்தைய வாரங்களிலும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.  இது குறித்து நான் விரிவாக ஆய்வு செய்தேன். நானும் அமைச்சரவை உறுப்பினர் என்பதால் இந்த விலை ஏற்றம் தொடர்பில் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அரசாங்கம் அறிவிப்பதற்கு முன் நீங்கள் முந்திக் கொண்டு அறிக்கை விடாதீர்கள் என்று அவர் தெரிவித்தார்.

வெளி நாடுகளைக் தளமாகக் கொண்ட சில ஊடகங்கள் இந்த விவகாரத்தில் முந்திக்  கொள்கின்றனர். ஊடகங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் நம்பமான தரப்பிடம் இருந்து தகவல்களை பெறுவர் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நேற்று இங்கு நடைபெற்ற ஜீவா மடாணி நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

உறுதி செய்யப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத வட்டாரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.

களங்கம் விளைவிக்க கூடிய மற்றும் பொய்யான தகவலைப் பரப்பும் விவகாரத்தை முறையாக கையாளும் திறனை மடாணி அரசாங்கம் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

வரும் ஜூன் மாதம் எரிபொருளுக்கான உதவித்தொகை மலேசியா அகற்ற உள்ளதாகவும் இந்த மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் பக்கத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஆதரவு சோதிக்கக் கூடிய அக்கினி பரீட்சையாக இது விளங்கும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.