கோலாலம்பூர், ஏப் 29: கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 12.29 மணியளவில் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் சுக்கா பூமிக்கு தெற்கே 147 கிலோமீட்டர் (கிமீ) தொலைவில் 70 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
"மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று முதற்கட்ட மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா


