ஷா ஆலம், ஏப் 19: இன்று ஜெர்மனிக்கு பணி நிமித்தம் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை டத்தோ மந்திரி புசார் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது மலேசியர்களை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வணிக சமூகத்துடனும் மாணவர்களுடனும் குறிப்பாக முனிச்சில் படிப்பைத் தொடரும் சிலாங்கூர் மாணவர்களுடன் சுமார் இரண்டு மணி நேரம் நட்புறவாக உரையாடினர்.
அதிகாரப்பூர்வ பணிக்காக நான் வெளிநாடு செல்லும்போது “மலேசிய குடிமக்கள் மற்றும் சமூகங்களை, குறிப்பாக வெளிநாட்டில் உள்ள சிலாங்கூர் மாணவர்களைச் சந்திப்பதை ஒரு வழக்கமான நடவடிக்கையாக கொண்டுள்ளதாக கூறினார்.
"இந்தச் சந்திப்பின் மூலம், மூனிச்சில் வசிக்கும் அங்குள்ள மலேசியர்களின் பிரச்சனைகளை கேட்டறிவதுடன், மலேசிய பற்றிய அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் அதே வேளையில், நாட்டு நடப்பை பற்றிய விளக்கமளிக்கவும் இப்படிப்பட்ட சந்திப்புகள் வாய்ப்பளிக்கிறது" என்று அவர் முகநூலில் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி, மக்கள் மற்றும் மாநிலத்தின் நல்வாழ்வைத் தொடர முதல் சிலாங்கூர் திட்டம் (RS-1) மூலம் மேற்கொள்ளப்படும் மாநில அரசாங்கத்தின் திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கூட்டத்தை ஒருங்கிணைக்க உதவிய மலேசிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (Mida) வுக்கும், மூனிச்சிற்கும் வருகை புரிந்திருந்த அனைவருக்கும் அமிருடின் தன் நன்றியை தெரிவித்தார்.
ஹானோவர் மெஸ்ஸே 2024 திட்டத்தில் குழு உறுப்பினராக கலந்து கொள்வதுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியைக் காண கொலோகோனுக்குப் பயணம் தொடரும் என்றும் அவர் கூறினார்.


