HEALTH

ஹரி ராய பெருநாட்காலத்தில்  டிங்கி பரவுவதைத் தடுக்க  உதவ  பொதுமக்களை MBSA கேட்டுக்கொள்கிறது

13 ஏப்ரல் 2024, 11:31 PM
ஹரி ராய பெருநாட்காலத்தில்  டிங்கி பரவுவதைத் தடுக்க  உதவ  பொதுமக்களை MBSA கேட்டுக்கொள்கிறது

ஷா ஆலம், ஏப்.13: பண்டிகைக் காலங்களில் டிங்கி காய்ச்சல் பரவாமல் தடுக்க ஷா ஆலம் நகர சபை (எம்பிஎஸ்ஏ) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஏடிஸ் கொசு கடியிலிருந்து  பொதுமக்களையும்  அவர்கள் குடும்பத்தையும் பாதுகாக்க மூன்று எளிய வழிமுறைகளை Facebook வழியாக MBSA பகிர்ந்துள்ளது.

டிங்கி  காய்ச்சல் தொற்று அதிகரிக்கும்  காலங்களில் பெரு நாட்காலமும் ஒன்றாகும்," என்று கூறிய அவர்  டிங்கியை தடுக்க மூன்று வழிமுறைகள்:

1. வீட்டு  பாத்திரங்களில் தண்ணீர் தேங்கி  நிற்காத தை  உறுதி செய்து கொள்வது.

2. உங்கள் குடியிருப்பு  தொற்றுநோய் பகுதியாக அடையாளம் காணப் பட்டிருந்தால், மாலை மற்றும் அதிகாலையில் வீட்டிற்கு வெளியே இருப்பதை தவிர்க்கவும்

3. வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு, மறைந்திருக்கும் கொசுக்களை அழிக்க ஏரோசோல் களை வீடு முழுவதும் தெளிக்கவும்

கடந்த ஆண்டு முழுவதும் டிங்கி பரவுவதைக் கட்டுப்படுத்த RM1.18 மில்லியனுக்கும் அதிகமாக செலவிட்டதாகவும் MBSA தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி வரை,  டிங்கி கட்டுப்பாட்டு செயல் முறைக்கு மொத்தம் RM 84,731 பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.