ANTARABANGSA

 இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

8 ஏப்ரல் 2024, 4:07 AM
 இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரிப்பு

தெஹரான், ஏப் 8: காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்ந்துள்ளதாக எல்லைகளற்ற செய்தியாளர்கள் (RSF) நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாமா நியூஸ் பாலஸ்தீனம் RSF ஐ மேற்கோள் காட்டி, 7 அக்டோபர் 2023 முதல் குண்டுவெடிப்புகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஈரானிய ரிபப்ளிக் நியூஸ் ஏஜென்சி (ஐஆர்என்ஏ) தெரிவித்துள்ளது.

காசாவில் இத்தகைய அவலங்களைத் தடுக்கும் முயற்சியில் இஸ்ரேலிய ஆட்சியின் மீது அழுத்தத்தை அதிகரிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு RSF அழைப்பு விடுத்துள்ளது.

காசா மீதான தாக்குதலில் 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்தின் (UNICEF) நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் தெரிவித்தார்.

இஸ்ரேலிய இனப் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,137 ஆகவும், 75,815 பேர் காயமடைந்ததாகவும் காஸாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.

- பெர்னாமா-இர்னா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.