தைப்பே, ஏப் 8 - கிழக்கு தைவானில் உள்ள ஹூவாலியன் மாவட்டத்தின்
கடற்கரைக்கு அப்பால் ரிக்டர் அளவில் 5.4 எனப் பதிவான நிலநடுக்கம்
நேற்று மாலை 6.01 மணியளவில் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை
மேலாண்மை மையத்தை மேற்கோள் காட்டி சென்ட்ர்ல் நியுஸ் ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த பூகம்பம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிருடச்சேதங்கள்
குறித்து எந்த தகவலும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
இந்த பூகம்பம் பசிபிக் பெருங்கடலில் ஹூவாலியன் மாவட்டத்தின்
கிழக்கு-வட கிழக்கே 40.2 கிலோ மீட்டர் தொலைவிலும் 16.9 கிலோ மீட்டர்
ஆழத்திலும் மையமிட்டிருந்ததாக வானிலை மேலாண்மை மையம்
தெரிவித்தது.
நில அதிர்வின் உண்மையான விளைவை அளவிடும் பூகம்பத்தின் தீவிரம்
ஹூவாலியன் மற்றும் இலான் மாவட்டங்களில் தைவானின்
அளவீட்டின்படி 7 அடுக்கில் 4ஆக இருந்தது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நில அதிர்பு தைப்பே மற்றும் நியு
தைப்பேவில் வலுவாக உணரப்பட்டது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தைவானை நிலநடுக்கம் உலுக்கியப் பிறகு
அங்கு 710 பூகம்பத்திற்குப் பிந்தைய நில அதிர்வுகள் உணரப்பட்டதாகச்
சி.என்.ஏ. செய்தி நிறுவனம் கூறியது.


