ANTARABANGSA

நெதான்யாஹூ அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

1 ஏப்ரல் 2024, 3:18 AM
நெதான்யாஹூ அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

ஜெருசலம், ஏப் 1 - பெஞ்சமின் நெதான்யாஹூவின் அரசாங்கத்திற்கு எதிராகவும், தீவிர பழைமைவாத  யூத ஆண்களுக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு எதிராகவும்  ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று  ஜெருசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அரசாங்கத்தை மாற்றுவதற்கு ஏதுவாக புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கில்     கடந்த 2023ஆம் ஆண்டு  இஸ்ரேலை உலுக்கிய மாபெரும் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கிய சில எதிர்ப்புக் குழுவினர்  நெசெட் எனப்படும்  நாடாளுமன்றத்திற்கு  வெளியே பேரணியை ஏற்பாடு செய்தனர்.

பெரும்பாலான இஸ்ரேலியர்களை பிணைக்கும் இராணுவ சேவையின் சுமையில் சமமான பங்கையும் எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள். கடந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதல் மற்றும் காஸாவில் நடந்து வரும் போரில் இதுவரை சுமார் 600 இஸ்ரேலிய  வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் தொடங்கிய பின்னர் நிகழ்ந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக இது தோன்றியதாக என்12 செய்தி நிறுவனம் கூறியது. இந்தப் பேரணி பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்ததாக ஹாரிட்ஸ்  மற்றும் ஒய்நெட் செய்தித் தளங்கள் தெரிவித்தன.

சுமார்1,200 பேர் கொல்லப்படுவதற்கும் 250 க்கும் மேற்பட்டோர்  பணயக் கைதிகளாக பிடிக்கப்படுவதற்கும் காரணமான தெற்கு இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் மற்றும் பாதுகாப்பு தோல்வி குறித்து நெதான்யாஹூவின் அமைச்சரவை பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

பேரணியில் 74 வயதான நூரிட் ராபின்சன் கூறுகையில், இந்த அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் நம்மை படுகுழியில் தள்ளிவிடுவார்கள் என்று கூறினார்.

பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலின் போர் நெதன்யாஹூவின் கூட்டணி அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு  சமூகத்தில் நீண்டகால பிளவை அதிகப்படுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.