ANTARABANGSA

காஸாவில் பஞ்சத்தைப் போக்க இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு

29 மார்ச் 2024, 4:12 AM
காஸாவில் பஞ்சத்தைப் போக்க இஸ்ரேலுக்கு அனைத்துலக நீதிமன்றம் உத்தரவு

தி ஹேக், மார்ச் 29 - காஸாவிலுள்ள பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான மற்றும் பயனுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள்  நேற்று  இஸ்ரேலுக்கு ஒருமனதாக உத்தரவிட்டனர்  .

காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மோசமான வாழ்க்கை நிலையை எதிர்கொள்வதோடு அங்கு பஞ்சமும் பட்டினியும் பரவி வருவதாக அனைத்துலக நீதிமன்றம் கூறியது.

காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள்  பஞ்சத்தின் அபாயத்தை தவிர வேறு எதையும் எதிர்கொள்ளவில்லை என்பதை நீதிமன்றம்  கவனிக்கத் தவறவில்லை என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

காஸாவில் இஸ்ரேல்  அரசு  இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கூறி கொண்டு வரப்பட்ட வழக்கின்  ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்கா இந்த புதிய நடவடிக்கைகளை கோரியது .

இனப் படுகொலை உடன்படிக்கையின் கீழ் வரக்கூடிய எந்தவொரு செயல்களில் ஈடுபடுவதிலிருந்து விலகி இருக்குமாறு  ஜனவரியில் உலக  நீதிமன்றம்   இஸ்ரேலுக்கு  உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி மாதம் வழங்கிய உத்தரவை அனைத்துலக நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தியது. மேலும் காஸா முழுவதும் பாலஸ்தீனர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரம் மற்றும் மருத்துவ பொருட்கள் மற்றும் மருத்துவ பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய  இஸ்ரேல்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது

நிலம் கடக்கும் புள்ளிகளின் திறன் மற்றும் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமாகவும் தேவையான வரை அவற்றைத் திறந்து வைப்பதன் வாயிலாகவும் இதனைச் செய்ய முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீர்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுகிறது என்பதை உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட  ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு  இஸ்ரேலுக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது .

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.