பட்டாலுங் (தாய்லாந்து), மார்ச் 25 - தென் தாய்லாந்தின் பட்டாலுங்கில்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரு மலேசியர்கள்
பலியானதோடு மேலும் இருவர் கடுமையான காயங்களுக்குள்ளாயினர்.
நான்கு மலேசிய பிரஜைகள் பயணம் செய்த கார் கட்டுப்பாட்டை இழந்து
டிரெய்லர் லோரியுன் பின்புறம் மோதியது தொடக்க கட்ட விசாரணை வழி
தெரியவந்துள்ளது என்று காவோ சாய்சோன் துணைப் போலீஸ் தலைவர்
லெப்டிணன்ட் கர்னல் போலீஸ் கியாட்திசாய் குமாமிட் கூறினார்.
இந்த விபத்தில் கார் ஓட்டுநரான 41 வயது தாய்லாந்து பிரஜை
கடுமையான காயங்களுக்குள்ளானதோடு காரும் முற்றாக நொறுங்கியது
என்று அவர் சொன்னார்.
அக்காரில் பயணித்த 58 மற்றும் 63 வயதுடைய இருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 23 மற்றும் 73 வயதுடைய இதர
இரு பயணிகள் கடுமையான காயங்களுக்குள்ளாயினர் என்றார் அவர்.
இவ்விபத்தில் இறந்த மலேசியர்கள் இன்னும் அடையாளம்
காணப்படவில்லை எனக் கூறிய அவர், இந்த விபத்து தொடர்பில்
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.


