மாஸ்கோ, மார்ச் 25 - மாஸ்கோவிற்கு வெளியே உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கலை நிகழ்ச்சி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 152 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்தியத்திற்கான ரஷ்ய அவசரகால அமைச்சு நேற்று தெரிவித்தது.
பயங்கரவாத தாக்குதலின் விளைவாக 285 பேர் (எட்டு சிறார்கள் உட்பட) காயமடைந்தனர். மேலும் 133 பேர் (மூன்று சிறார்கள் உட்பட) உயிரிழந்தனர். நான்கு சிறார்கள் உட்பட 114 பேர் மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சை மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது .
- பெர்னாமா-ஸ்புட்னிக்


