கோத்தா கினபாலு, மார்ச் 24- இங்குள்ள கம்போங் லிக்காசில் இன்று அதிகாலை பத்து வீடுகளில் ஏற்பட்ட தீவிபத்தில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் தங்கள் குடியிருப்புகளை இழந்தனர்.
இந்த தீவிபத்து தொடர்பில் அதிகாலை 3.11 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடத்ததைத் தொடர்ந்து லிந்தாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 16 தீயணைப்பு வீரர்கள் ஆறு நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு பேச்சாளர் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் லிந்தாஸ் தீயணைப்புத் வீரர்களுடன் கோத்தா கினபாலு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஒன்பது வீரர்களும் பெனாம்பாங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஒருவரும் உதவியதாக அவர் குறிப்பிட்டார்.
லிந்தாஸ் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் டாங்கியிலுள்ள நீரைப் பயன்படுத்தி தீயை அணைத்த வேளையில் கோத்தா கினபாலு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைப்பதற்கு டாங்கி மற்றும் அருகிலுள்ள குழாய் நீரைப் பயன்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிருட்சேதம் ஏற்பட்டதாக புகார் செய்யப்படவில்லை எனக் கூறிய அவர், அதிகால 6.49 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.
தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.


