ANTARABANGSA

மலேசியா- மாலத்தீவு இடையே கல்வி, சுற்றுலாத் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை

22 மார்ச் 2024, 4:30 AM
மலேசியா- மாலத்தீவு இடையே கல்வி, சுற்றுலாத் துறைகளை வலுப்படுத்த நடவடிக்கை

புதுடில்லி, மார்ச் 22 - மலேசியப் பல்கலைக்கழகங்களில் மாலத்தீவு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுற்றுலாப் பரிமாற்றத்தை வளர்க்கவும் மலேசியா மற்றும் மாலத்தீவு அரசுகள்  புதிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

மாலத் தீவிற்கான மலேசியத் தூதர்  பட்லி ஹிஷாம் ஆடம் மற்றும் மாலத்தீவு  உயர் கல்வி, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் மரியம் மரியா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில்   தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி  பயிற்சி (திவேட்)  மீதான ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் மலேசியாவில் மாலத்தீவு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே  கல்வி உறவுகளை வலுப்படுத்துவதையும் எங்கள் மாணவர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்குவதையும் இச்சந்திப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கொழும்பில் உள்ள மலேசிய தூதரகம் வியாழக்கிழமை ஒரு சமூக ஊடகப் பதிவில்  தெரிவித்தது.

கொழும்பில் உள்ள மலேசிய தூதர் பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக இவ்வாரம் மாலைதீவுக்கு வருகை மேற்கொண்டார்.

சுகாதார அமைச்சர் அப்துல்லா கலீல், பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சைட் மற்றும் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் உட்பட பல மாலத்தீவு அமைச்சர்களை அவர் சந்தித்தார்.

சுற்றுலாத் துறை இணை அமைச்சர் அகமது நஜிம் முகமது உடனான தனது சந்திப்பில்   விமான தொடர்புகள் மற்றும் சுற்றுலா மேம்பாடு குறித்து பட்லி ஹிஷாம் விவாதித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.