ANTARABANGSA

பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தின் 14 பணியாளர்கள் பிணைப்பிடிப்பு

13 மார்ச் 2024, 8:12 AM
பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தின் 14 பணியாளர்கள் பிணைப்பிடிப்பு

மாஸ்கோ, மார்ச் 14 - பாலஸ்தீன செம்பிறைச் சங்கத்தின் (பி.ஆர்.சி.எஸ்.) 14

பணியாளர்களை இஸ்ரேல் பிணை பிடித்துள்ளதாக அந்த அமைப்பை

மேற்கோள் காட்டி ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், பிணை பிடிக்கப்பட்ட செம்பிறைச் சங்கப் பணியாளர்கள்

இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை என்று பி.ஆர்.சி.எஸ். கூறியது.

பி.ஆர்.சி.எஸ். உறுப்பினர்கள் 14 பேரை இஸ்ரேலிய தரப்பு இன்னும்

தடுத்து வைத்துள்ளது. எனினும் அவர்களின் இருப்பிடம் இன்னும்

தெரியவில்லை. பிணைபிடிக்கப்பட்ட பணியாளர்கள்

துன்புறுத்தப்படுவதோடு அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக

விடுவிக்கப்பட்ட பணியாளர்கள் கூறியுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு

குறித்து குடும்பத்தினரும் சகாக்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகப்

பாலஸ்தீன செம்பிறைச் சங்கம் கூறியது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் உறுப்பினர்கள் உடனடியாக

விடுவிக்கப்படுவதற்கு ஏதுவாக இவ்விவகாரத்தில் அனைத்துலக சமூகம்

தலையிட்டு இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அந்த

அமைப்பு கேட்டுக் கொண்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.