ரமல்லா, பிப் 27- பாலஸ்தீனப் பிரதமர் முகமது ஸ்தாயே தனது பதவி துறப்புக் கடிதத்தை ரமல்லாவில் திங்கள்கிழமை சமர்ப்பித்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் (டி.பி.ஏ.) தெரிவித்துள்ளது.
பல நாடுகளின் நெருக்குதலின் விளைவாக அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததாக அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வாத்தான் டிவி செய்தி வெளியிட்டுள்ளது.
பல்வேறு தடைகளை எதிர்கொண்ட போதிலும் இரு நாடுகளின் தீர்வுக்கான இலக்கை நோக்கிய பாதையை மாற்றும் முன்னோடி முயற்சியாக ஸ்தாயேவின் ராஜினாமா பார்க்கப்படுகிறது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பணியாற்றி வரும் ஸ்தாயே, இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார்.
புதிய அரசாங்கம் அமைவதற்கு வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


