ECONOMY

மத்திய, மாநில அரசுகளின் உதவித் திட்டங்களில் பயனடைய- அது பற்றி  அறிந்திருக்க வேண்டும்

23 பிப்ரவரி 2024, 11:46 AM
மத்திய, மாநில அரசுகளின்  உதவித் திட்டங்களில் பயனடைய- அது பற்றி  அறிந்திருக்க வேண்டும்

கோலசிலாங்கூர்.23- கடந்த வாரத்தில் மரணமடைந்த அமரர் பாலா வயது 66 மற்றும் அமரர் இராமசந்திரன் வயது 78 ஆகியோர் வீடுகளுக்கு கோலசிலாங்கூர்  தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன், புக்கிட் மெலாவத்தி இந்தியத் தலைவர் கலைக் குமார் மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் விக்கி ஆகியோர் சென்று ஆறுதல் கூறினார்.

மேலும் அந்த குடும்ப பிள்ளைகளுக்கு கல்விக்கான சிறு உதவித் தொகை வழங்கினர். அந்த 2 வீடுகளிலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து உதவித் தொகை வழங்கப்பட்டது.

அதே வேளையில்  அங்கு நோய்வாய் பட்டிருந்த மேலும் இருவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். அவர்கள் வீட்டில் உயர்க் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் ரி.ம. 1,000.00 உதவிக்கு விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.

அதே வேளையில் இடை நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரி.ம 100.00 கிடைக்க ஆவன செய்வதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களுக்கு தனது சொந்த நிதியாக ரி.ம. 200.00 கொடுத்து உதவினார்.

பேங் சிம்பனான் நேஷனல் உதவித்தொகை ரி.ம. 1,000.00, சேமநிதி வாரியம் கொடுக்கும் இறப்பு உதவித் தொகை குறித்தும் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர். இந்த உதவித் தொகை கிடைப்பதற்கு கோல சிலாங்கூர் பி.கே.ஆர். அலுவலகத்துடன் தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.